மதுரை அருகே அரசு ந‌ர்‌சி‌‌ங் கல்லூரி: அமைச்சர் தகவல்!

புதன், 5 நவம்பர் 2008 (10:44 IST)
மதுரை மாவ‌ட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் எ‌ன்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
மதுரை‌யி‌ல் நட‌ந்த அவசர ‌சி‌கி‌ச்சை‌க்கான தொலைபே‌சி எ‌‌ண் 108-ஐ அழை‌த்தா‌ல் வரு‌ம் இலவச ஆ‌ம்புல‌ன்‌ஸ் சேவையை‌த் தொட‌ங்‌கி வை‌த்து‌ப் பே‌சிய அவ‌ர், இ‌ந்த சேவை‌க்காக மதுரை‌யி‌ல் 13 வாகன‌ங்க‌ள் இய‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்றா‌ர்.

இந்த சேவை மூலம் சென்னையில் கடந்த சில மாதங்களில் 1,326 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெ‌ரி‌வி‌த்த அவ‌ர் இந்தத் திட்டத்துக்கு அரசு ரூ.22.87 கோடி ஒதுக்‌கியு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

மே‌லு‌ம், இது போ‌ன்று பல இலவசத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கு‌றி‌ப்ப‌ட்ட அமை‌ச்ச‌ர், கர்ப்பிணிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் சுமா‌ர் 8 ஏக்க‌ர் பர‌ப்பள‌வி‌ல் செவிலியர் கல்லூரி அமைக்கப்பட உள்ளது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.