செயல்வழிக் கற்றலை நிறுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

திங்கள், 13 அக்டோபர் 2008 (11:46 IST)
செயல்வழிக் கற்றல் திட்டத்தை நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்ட‌ம் நட‌த்த உ‌ள்ளன‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலர் போத்திலிங்கம் கூறுகை‌யி‌ல், செயல்வழிக்கற்றல் திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வலியுறுத்தி வருகிறோம்.

ஆகையா‌ல், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் வரை செயல்வழிக்கற்றல் திட்டத்தை நிறுத்தி வைக்ககோரி தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதன்படி நாளை மாலை எல்லா மாவட்டங்களிலும் வட்டார வளமையம் முன்பு எங்கள் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அடுத்ததாக நவம்பர் 14ஆ‌ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.

ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:10 ஆக மாற்ற வேண்டும். கல்வித்துறையில் தொடக்க கல்விக்கு என தனி இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தொடக்க கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வ‌லியுறு‌த்‌தி போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று போ‌த்‌தி‌லி‌ங்க‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்