பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், அயல் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து விட்டது.
ஊனமுற்றோருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கு நாளை முதல் ஆகஸ்ட் இறுதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடக்கும் கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
75,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவு இடம் போக மீதமுள்ள 1000 இடங்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு நடக்கிறது. கடந்த ஆண்டை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளன. இதனால் 15,000 இடங்கள் அதிகமாக கிடைக்கிறது. பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.