நவராத்திரி நாட்களில் எவ்வாறு வழிபடவேண்டும்...?

விஜயதசமியன்று கலச பூஜையில் பயன்படுத்திய கலசத்தின் முன்பாக அமர்ந்து, முப்பெரும் சக்தியரையும் மனதால் வேண்டிக்கொண்டு ஆரத்தி எடுக்கலாம். 

முப்பெருந்தேவியரும் இந்தக் கலசத்தில் நிறைந்திருந்தது போல இனி என்றென்றும் நமது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டிக் கொண்டு, கலசத்தில் உள்ள நீரை வீடு முழுதும் தெளித்து பூஜையினை முழுமை செய்யுங்கள். 
 
இந்த நவராத்திரி நாட்களில் அழகிய பொம்மைகளைக் கொண்டு கொலு வைப்பது பலருடைய வழக்கம். சிலர் ஒவ்வொரு வருடமும் பிரத்யேகமான ஓர் ஆன்மிகக்  கருத்தை மூலமாக வைத்து பிரமாண்டமான வகையில் கொலு வைப்பார்கள். 
 
பொதுவாகவே இப்படி வைக்கப்படும் கொலுவைப் பார்க்க அக்கம்பக்கத்தார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அன்றன்றைய நிவேதனப் பொருளையும், மஞ்சள், குங்குமம், வெற்றிலை-பாக்கு என்று மங்கலப் பொருட்களையும் வழங்கி சந்தோஷப்படுத்துவார்கள், சந்தோஷப்படுவார்கள். இப்படி பிறரை குறிப்பாக சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும், சிறுமிகளையும் அழைத்து அவர்களுக்கு ‘மரியாதை’ செய்வதிலும் ஒரு தத்துவம்  உள்ளடங்கியிருக்கிறது. 
 
அதாவது, அப்படி வரும் பெண்களோடு அம்மன் தானும் உடன் வருகிறாள், அவளும் நம் ‘மரியாதை’யை ஏற்றுக்கொள்கிறாள் என்ற நம்பிக்கைதான் அது! நவராத்திரி விரத பூஜையின் மகிமையால் இல்லம் சிறக்கும்; மங்களங்கள் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்