நவராத்திரி விழா ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா...?

புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.


ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால்  பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது. 
 
சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம்  கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. 
 
வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.
 
நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள்  நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்