கோடையில் தலையில் அதிகமாக அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?
வியாழன், 21 ஏப்ரல் 2022 (13:57 IST)
கோடை காலத்திற்கேற்ப நமது உடலை பாதுகாக்க முடியும். அதுப்போல தான், கோடையில் கூந்தல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
கோடை வெயிலினால் அதிகம் பாதிக்கப்பட கூடிய பகுதி என்றால், அது நம் தலை தான். வெயில் நேரடியாக படுவதாகட்டும், அதிகமான வியர்வை ஏற்படுவதாகட்டும் அனைத்தினாலும் பாதிக்கப்படுவது தலை தான்.
வியர்வை ஏற்பட்டாலும் அங்கு நம்மால் துடைக்க முடியாது அல்லவா. அதனால் தான் கோடைகாலத்தில் அதிகமாக தலைக் குளிக்க வேண்டும்.
கோடையில் தான் தலையில் அரிப்பு முதல் முடி உதிர்வு வரை அதிகமாக ஏற்படக்கூடும். எனவே, தான் மற்ற காலங்களைவிட கோடையில் சற்று அதிக கவனிப்பு கூந்தலுக்கு தேவைப்படுகிறது.
அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்ற வற்றையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, அரிப்பு, எரிச்சல் பிரச்சனை இருந்தால் தலைக்கு குளிக்க வேண்டும்.
அதிகப்படியான அழுக்கு, சுத்தமற்ற ஸ்கால்ப், கிருமிதொற்று, பொடுகு, பேன் தொல்லை அல்லது ஷாம்பு அழற்சி போன்ற வேறு சில காரணங்களாலும் அரிப்பு ஏற்படக்கூடும்.
ஸ்கால்ப் பூஞ்சை மற்று பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டு கூட அரிப்பு ஏற்படலாம். தலையில் பேன் இருந்தால் கடுமையான அரிப்பு தொல்லை இருக்கும்.
போதுமான ஈரப்பதம் இல்லையென்றால், தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும். மோசமான சுகாதாரம் மற்றும் கெமிக்கல் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களால் ஏற்படக்கூடிய நோய்தொற்றுகள்.
தலையில் அதிகமாக வியர்த்தால் கூட அரிப்பு அதிகமாக இருக்கும். இது தவிர, மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் கூட அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.