மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.
வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன.
வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.