வாழை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன....?

வாழை இலையில் இருக்கும் குளோரொபில் என்ற வேதிப்பொருள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது உணவை சீக்கிரமாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் ஆற்றுகிறது. 

உணவில் இருக்கும் நச்சுக்களும்கூட வாழை இலையால் சாப்பிடும்போது நீங்கிவிடும். அரைத்த வாழை இலையை உடம்பில் தேய்த்து குளித்தால் சத்துத்துகள் கிடைக்கும். 
 
சருமம் பளபளப்பாக இருக்கும். உடம்பில் அல்லது முகத்தில் உள்ள சுருக்கங்கள் கரும்புள்ளிகள், தோல் எரிச்சல் குணப்படுத்தும், முகப்பரு மற்றும் பருக்கள் நீங்கி மேனி ஈரப்பதமாகவும், மென்மையாகவும் தோற்றம் கொடுக்கும்.
 
வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்டி ஆக்ஸிடண்ட்  கிடைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் நவீன வாழ்க்கையின் தாக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் வராமலும் தவிர்க்கலாம்.
 
இருமல், சுவாச பிரச்னை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு, முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் வாழை இலைச்சாற்றினை ஜூஸாகக் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
ஆயுர்வேதத்தில் வாழை இலை குளியல் நச்சு மற்றும் கொழுப்பு நீக்கும் சிகிச்சையாக செய்யப்படுவது மிகவும் பிரபலமாக இருக்கிறது.
தொண்டைப் புண் (டான்சில்) உள்ளவர்கள் வாழை இலைச்சாறு ஒரு வேளை குடித்தால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும். 
 
காயங்கள் அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு கட்டு போட வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று இலைகள் வைத்து கட்டுப்போட்டால் காயங்கள் ஆறும், எரிச்சலும் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்