வில்வம் தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும். வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள் , பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.
சிவனுக்கு ஒரு வில்வம் சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இலைகள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.