பலாப்பழத்தில் என்ன சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது தெரியுமா...?

சனி, 1 ஜனவரி 2022 (11:50 IST)
பலாப்பழத்தில் நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஏ-யும் சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உண்டு. 

பலாப்பழச் சுளையை இரவு வேளையில் தேனில் ஊறவைத்துக் காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
 
பழ வகைகளிலேயே மிகப்பெரிய தோற்றமுடன் விளங்கும் பலாபழம் வெளியே சொரசொரப்பான தோலைக் கொண்டு திகழ்கிறது. தடிப்பான தோலை அகற்றினால் சடை போன்ற அமைப்புக்குள் இருக்கும் பலாச்சுளைகள் தங்கம் போன்ற பளபளப்புடன் காணப்படும்.
 
வைட்டமின் பி,  சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சுண்ணாம்புச் சத்தும்,இரும்புச் சத்தும் கொண்டு திகழும் இப்பழம் வாயுவை ஓரளவு உண்டு பண்ணுடையதாக இருந்தாலும், ரத்த விருத்திக்குச் சிறந்து விளங்குவதாகும்.
 
நரம்புகளுக்கு உறுதியளிக்கும் தன்மை கொண்ட இப்பழம், நமது தோலை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தொண்டை கட்டு, குரல் கட்டு போன்ற நோயுள்ளவர்கள் பலா சாப்பிடுவதன் மூலம் நல்ல குரல் வளம் பெறலாம்.
 
இரவில் தேனைக் கலந்து வைத்துச் சாப்பிட்ட முடியாதவர்கள் நாட்டு சர்க்கரையைக் கலந்து வைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம் அல்லது பசு நெய் கலந்து சாப்பிட வேண்டும்.
 
இரவு முழுவதும் தேனில் ஊறிடும் பலாப்பழம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் என்றாலும் மிகவும் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்