இரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தையும் குணமாக்கும். இதற்கு துத்தி இலைகளை விளக்கெண்ணய்யுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டிக் கொண்டால் மூலச்சூடு நீங்கும்.
ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்துசாப்பிட குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சினையைக் குணப்படுத்தும். இப்பிரச்சினையைப் போக்க துத்தி இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அல்லது துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் வலியைக் குணமாகும். அதிகம் வேலை செய்தாலோ அல்லது தூரப் பயணம் செய்தாலோ உடல்வலி ஏற்படும். இந்நேரங்களில் துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.