இந்த ஒரு பொருளில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...?

வெள்ளி, 29 ஜூலை 2022 (09:21 IST)
ஓமம் நிறைய ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன. ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும், நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது.


இரண்டு டீஸ்பூன் ஓமத்தை எடுத்து லேசாக வறுத்து, பின் ஒரு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தண்ணீரில் ஓமத்தை நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஓமதில் உள்ள நொதிகள் இரைப்பை சாறுகளை வெளியிடுவதற்கு உதவுகின்றன. இதனால் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஓமம் சிறிதளவு உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் அஜீரண பிரச்சினைகளை தீர்க்கும்.

தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுரையீரலை சுத்தப்படுத்தவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்சனைக்கு ஓம தண்ணீர் நல்ல நிவாரணியாக இருக்கிறது.

வயிறு வலி, இரப்பைக் குடல் பிரச்சனைகளுக்கும் ஓமம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒம வாட்டர் குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

முடக்கு வாதம், அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கும் ஓமம் உதவுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதோடு இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்