100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17 கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது.
வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் ஃபுளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.
பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.