புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் விட்டமின் சி உள்ளது. மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும். தன்மை கொண்டது. மஞ்சளில் தாதுப் பொருட்களான மாங்கனிஸ்,பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம், மெக்னீசியம், போன்றவை அடங்கியுள்ளன.
மஞ்சள் தூளுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துப் பூசினால் புண், சுளுக்,கு, உரசல் காயங்கள், மூட்டு வலி குணமாகும். பெருங்காய தூளையும் மஞ்சள் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.