அழகை மேம்படுத்த உதவும் ஆரஞ்சு பழம்!!

ஆரஞ்சு ஜுஸை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள் இதை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். இவ்வாறு செய்வதால் கண்களில் ஏற்படும் சேர்வு நீங்கி பிரகாசமாகும்.
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவற்றை  ஒன்றாக அரைத்து, இதனை தலைக்குத் தேய்த்து குளிப்பதால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத்  தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
 
வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து  இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உலர்ந்த ஆரஞ்சு தோல் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பிஞ்சு கடுக்காய் 10 கிராம், வால் மிளகு 10 கிராம், பச்சை பயறு கால் கிலோ  எல்லாவற்றையும் கலந்து அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால், அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல்  பளபளக்கும்.
 
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன்  கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல்  முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்