ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும். ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.
பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.
ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.
1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.