புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.
வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும். மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.