ஏராளமான மருத்துவ பயன்களை உள்ளடக்கிய கரும்பு சாறு !!

சனி, 7 மே 2022 (11:16 IST)
கரும்பு சாற்றில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பல அமினோ அமிலங்கள் உள்ளது.


சிலருக்கு பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து, பற்கள் வலிமை இழந்து காணப்படும். கரும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் கரும்பு சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது.

வெயில்காலங்களில் பலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாகி உடல் எரிச்சல் ஏற்படும். இவர்கள் கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து குடித்து வந்தால் உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெரும்.

கரும்பு சாறு அருந்துபவர்களுக்கு இதயம் ஆரோக்கியம் மேம்படும். எனவே அவ்வப்போது கரும்பு சாறு பருகி வந்தால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கரும்புச்சாறு குடிப்பது சிறுநீர் பாதை தொற்று குணப்படுத்த உதவுகிறது, இது தவிர, கரும்புச்சாறு சிறுநீரக கல் வராமல் தடுக்கிறது.

கரும்பு சாறுடன் எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீர் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வந்தால் சிறுநீரக தொற்றுகள் நீங்கும்.

கரும்புச் சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலை நோய்த்தொற்றுக்கு எதிராகப் பாதுகாக்கிறது மற்றும் பிலிரூபின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, இது மஞ்சள் காமாலையை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்