கண்கள் ஒளி பெற, கண் எரிச்சல் நீங்க, கண்கள் குளிர்ச்சியடைய, கண் வலி அனைத்திற்கும் தீர்வு நம் வீட்டு சமையலறையிலும், தோட்டத்திலுமே உள்ளது.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும். வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிட மூளை பலமடையும், கண்களும் குளிர்ச்சியடையும்.
கண்கள் சிவப்பாக இருந்தால் ஆடாதோடா விதை நான்கும், கடுக்காய் மூன்றும், நெல்லிக்காய் விதை இரண்டும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.
கண்சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்துவர குணமாகும். முருங்கை பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண்நோய் அனைத்தும் குணமாகும்.