முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்...!
கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.
வாரம் ஒருமுறை இரவில் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஸ்கப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அலசவேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
வாரம் 2 முறை விளக்கெண்ணெய்யை கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊறவைத்து குளிக்கவேண்டும். வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊறவைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு அடர்த்தியும் அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில் கூட முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலை ஸ்காப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஊறவைத்து அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் தன்மை அதிகரித்து முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
கேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அவை மயிர்க்கால்களை வலிமையாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலசவேண்டும். இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம்.
வாரம் 2 முறை தலைக்கு ஹென்னா போட்டு வந்தால், அதில் உள்ள சீகைக்காய், பூந்திக் கொட்டை போன்றவை முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும்.