இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் சிவப்பாக மாறும்.
ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. எனவே இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுவதால், சருமம் அழகாக காணப்படும்.
அரை ஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்யவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் அழகாக காணப்படும்.