அன்றாட உணவில் வல்லாரை கீரையை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா....?

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:27 IST)
இரத்தில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது. இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் வல்லாரை இலைகளை தேனீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.


பார்வைதிறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல்  போக்கி, கண் நரம்புகளை பலமடைச்செய்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. காய்ச்சல் இருமல், சளி குணமடைகிறது.

வல்லாரை இலையுடன் துளசி இலைகள், மிளகு சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து மாத்திரைகளாக சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகிவிடுவதோடு அல்லாமல் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். உடற்சோர்வு தொண்டைக்கட்டு இதனையும் சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்கி, வயிற்றுப்புண் குடல் புண்ணை ஆற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

வல்லாரை கீரைபயன்படுத்தி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு உடம்பு எரிச்சல், உடல் சூடு குறையும். சிறியவர்களுக்கு 10-வல்லாரை இலைகளை பச்சையாகவே சாப்பிட கொடுக்கலாம். மூளை நரம்புகள் பலம்பெறும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். காசநோய் உள்ளவர்களுக்கும் சிறந்த பலனை தருகிறது.

வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து, இரவில் தூங்கப்போகும் முன், பாலில் கலந்து குடித்துவந்தால் வயிற்று பூச்சிகள் அழிந்துவிடும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி வீக்கம், கட்டிகள் மேல் கட்டி வர, விரைவில் குணமடையலாம்.

சுலபமாக கிடைக்கும் இந்த கீரைகள், காய்கறிகள் இதனை தவிற வேறெந்த ஊட்டச்சத்து பானங்களும் சாப்பிட்டு அவர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்