மருதாணியை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மருதாணி இலைகள், பனங்கற்கண்டு, பால், ஒரு பிடி மருதானி இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்துவர உள் உறுப்புகளின் உஷ்ணம் தணியும். வயிறு, நெஞ்சு எரிச்ச; சரியாகும். இது வெள்ளைப்படுதலுக்கு மருந்தாலிறது, உடல் எரிச்சல் குணமாகும்.
மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.