தேங்காய் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது.
இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.