கழற்சிக்காய் எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது...?

புதன், 25 மே 2022 (12:54 IST)
கழற்சிக்காய் நீண்ட நாட்பட்ட வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புரையோடிய  கட்டிகள் ஆகியவை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.


புதிதாக தூளாக்கப்பட்ட கழற்சி சூரணம் ஆறாத கட்டிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்ற மேல்பற்றிடும் மருந்தாகப் பயன்படுகிறது. கழற்சி இலைகள் மற்றும் விதைகள் வீக்கத்தைக் கரைக்க மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

காம்புகளும் இலைகளும் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாதவிலக்கை ஊக்குவிப்பதற்கும் பால் சுரப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

வறுத்த கழற்சிக்காய் பொடியை தீநீர் இட்டு உள்ளுக்குக் கொடுப்பதால் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா ஆகியன குணமாகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் இளந்தளிர்கள், வேர்ப்பட்டை ஆகியவற்றை கட்டிகளைக் கரைக்க உபயோகப்படுத்துகின்றனர்.

கழற்சி இலைச்சாற்றினை யானைக்கால் நோயைப் போக்குவதற்கும், வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதற்கும் உள் மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர்.

கழற்சி இலையை விழுதாக்கி மேல் பற்றிட வலி மற்றும் வீக்கம் தணிகிறது. இலையை விழுதாக்கி உள்மருந்தாகக் கொடுப்பதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணமாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்