ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியில் குறைவு அல்லது இரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படுவது அல்லது இரத்தத்தின் அதிகப்படியான இழப்பு இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.
அத்திப்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது, 4-5 அத்திப்பழங்களை தினமும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் அவற்றை சாப்பிடலாம், அல்லது தேனில் ஊறவைத்த உலர் அத்திபழத்தை தினமும் சாப்பிடலாம்.
தினமும் உணவில் அக்ரூட் பருப்புகள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சை போன்ற உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.