இரத்த சோகை ஏற்படுவதை தடுக்க உதவும் உணவுகள் என்ன...?

கீரைகளில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்த சோகைக்கு, பச்சை இலை காய்கறிகள் மிகவும் நல்லது. இரத்த சோகை என்பது உங்கள் இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை ஆகும்.

சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், தலைசுற்றல், நெஞ்சு வலி மற்றும் குளிர்ந்த நிலையில் கைகள் மற்றும் கால்களையும் நீங்கள் உணரலாம். உங்கள் தோல் வெளிர் மற்றும் மஞ்சள் நிறமாகவும் தோன்றலாம்.
 
கீரைகளில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்த சோகைக்கு, பச்சை இலை காய்கறிகள் மிகவும் நல்லது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து இயற்கையாகவே கீரைகளுக்கு அதிகம் உண்டு. 
 
வைட்டமின் சி: இரத்த சோகை பிரச்சனையில் இருந்து மீள இரும்புச்சத்து உணவுகளை மட்டும் உட்கொள்வது போதாது, நீங்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து உணவை உங்கள் உடல் உறிஞ்ச முடிகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். 
 
பழங்கள்: உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பழங்களில் நிரம்பியுள்ளன. இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் சில பழங்கள் மிகவும் நல்லது. மாதுளை, ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை நீங்கள் சேர்க்கலாம். இந்த பழங்கள் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும். 
 
இரத்த சோகை போன்ற நிலைமைகளுக்கு 4 முதல் 5 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதன் தோளை நீக்கிவிட்டு உண்ணுதல் மிகவும் நன்மை பயக்கும். பாதாம் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்