நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் கீரை எது தெரியுமா...?

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:50 IST)
வெந்தய கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளது.


நீரிழிவு நோய் உடல் ரத்தத்தில் சர்ககரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

அதே சமயம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை முறை உணவுகள் மூலம் உடலின் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். தங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான நிலைக்கு வைத்துக்கொள்ள முடியும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமான பிரச்சினை ஒரு பெரிய சோதனையாக அமையும். அவ்வாறு இருக்கும்போது வெந்தயத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

வெந்தயம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரெட் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் உடல் இன்சுலின் அளவை கட்டப்பாட்டில் வைத்திருக்க உதவும். வெந்தயம் சமையலுக்கு மட்டுமல்லாமல், பொடி செய்து தயிருடன் கலந்து சாப்பிடலாம். மேலும் வெந்தையத்தை டீ வைத்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

வெந்தய பொடியுடன், நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்