ஆரோக்கியமான உடலுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும்.
பெரும்பாலான கீரை வகைகளில் கால்சியம் உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும்.
பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமானக்கோளாறுகள் நீங்கும்.