இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்மையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தியுண்டாகும்.
மருத்துவப் பயன்கள்: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும்படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும். விஷம் முறிந்து நோயாளி குணமடைவான். விஷம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.