சோம்பு விதைகளின் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுபொருட்கள், வைட்டமின் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.
உடலுக்கு வலுவூட்டும் தாதுப்பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன, தாமிரம் தாது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.
வைட்டமின் ஏ, இ, சி போன்றவையும் பி குழும வைட்டமின்களான தயாமின், பைரோடக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.