இத்தனை அற்புத ஆரோக்கிய பலன்களை தரக்கூடியதா சாத்துக்குடி...?

திங்கள், 3 அக்டோபர் 2022 (14:40 IST)
சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். மேலும் இந்த பழத்தில் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் உள்ளது.


சாத்துக்குடி ஜூஸில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகளவில் இருப்பதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. சாத்துக்குடியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் இருப்பதால் கண்புரை உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகலாம். இதோடு எலும்புகள் வலுப்படையவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் ஞாபக மறதி பிரச்சனைக்கும் சாத்துக்குடி பழங்கள் உதவியாக உள்ளது.

சாத்துக்குடியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக நாம் சாத்துக்குடி ஜுஸை சாப்பிடும்போது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.

சாத்துக்குடியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அமிலங்கள் மற்றும் பித்த சுரப்பை அதிகரிப்பதன் மூலம் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு தேவையற்ற நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்