கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

திங்கள், 9 மே 2022 (14:54 IST)
கிரீன் டீ அன்டிஆக்சிடைஸ்ட் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த அளவில் பதப்படுத்தப்படுகிறது. ஆகையால், இதில் ஆண்டியாக்சிடேண்டுகள் மற்றும் பாலிபினால்களின் அளவும் அதிகமாக உள்ளது.


கிரீன் டீ குடிக்க சரியான நேரம் எது என தெரிந்து கொள்வது அவசியம். கல்லீரல் நோய்கள் முதல் வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், அல்சைமர் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நோய்களைத் தடுக்க கிரீன் டீ உதவும்.

கிரீன் டீயில் காஃபின் இருப்பதால், படுக்க செல்லும் முன் அதை குடிக்க வேண்டாம். அப்படி குடித்தால், தூக்க ஹார்மோன் மெலடோனின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

கிரீன் டீ குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலின் இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை சீர்படுத்தி, உடலுக்கு நன்மையை அளிக்க செய்கிறது.

க்ரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்று தான் எடை குறைய உதவும். இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட க்ரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.

க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்