ஹரியானா தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி! - காங்கிரஸ் கொண்டாட்டம்!

Prasanth Karthick

செவ்வாய், 8 அக்டோபர் 2024 (14:24 IST)

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினெஷ் போகத் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

 

 

ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஹரியானாவில் தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்துள்ள பாஜக மூன்றாவது ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

 

அதேசமயம் பல தொகுதிகளில் காங்கிரஸ் கையும் வலுவாக உள்ளது. இந்த தேர்தலில் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார்.
 

ALSO READ: தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் 3 முறை தனியார் பள்ளிகளுக்கு,2 முறை தனியார் நட்சத்திர விடுதிக்கு மிரட்டல். அச்சத்தில் மக்கள்!
 

தற்போது அவர் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமார் 59,065 வாக்குகள் பெற்றும் இரண்டாமிடத்தில் உள்ளார். 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வென்றுள்ளார்.

 

19 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றி பெறாமல் இருந்த ஜுலானா தொகுதியில் நின்று வினேஷ் போகத் பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்