தினமும் ரூ.20 லட்சத்திற்கு கஞ்சா விற்ற பெண் கைது!

Sinoj

வெள்ளி, 15 மார்ச் 2024 (15:03 IST)
போதைப் பொருள் கடத்தல் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள்  தடுப்பு பிரிவினர் கைது விசாரணை நடத்தி, அவரது கூட்டாளியையும் கைது செய்துள்ளனர்.
 
இது நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கானாவில் ஒரு பெண்மணி தினமும் ரூ.20 லட்சத்திற்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
 
தெலங்கானா மா நிலம் நானகிராம் குடா பகுதியில் வசித்து வந்த பெண், தன் வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் அவர் தினமும் 20 லட்சம் ரூபாய்க்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும்  நிலையில், அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அப்றிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்