அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார். தங்களது இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது என்றும் செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல, யார் பக்கமும் சாயக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் உள்ளிட்டோரின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது மைக் அணைக்கப்பட்டது. பின்னரும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார்.