இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார் என்றும், மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் எனவும் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியிடம் சில விவரங்கள் கேட்டறிந்து அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.