கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.
இதை அடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்து டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல் பரவியது. அதன்படி டெல்லியில் பாஜக தலைமையகத்தில் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார்.