விபத்து நடந்த இடத்தில் மெதுவாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. அதிகாரிகள் ஆய்வு..!

திங்கள், 5 ஜூன் 2023 (10:38 IST)
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் இன்று காலை முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அதே தண்டவாளத்தில் வந்தே பாரத் ரயில் மெதுவாக இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாகநாகா ரயில் நிலையத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் 51 மணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்து தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு இன்று காலை முதல் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் விபத்து நடந்த தண்டவாளத்தில் சற்று முன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. ஹவுராவிலிருந்து பூரி செல்லும் வந்தே பாரத் ரயில் இந்த பாதையில் மெதுவாக இயக்கப்பட்டதாகவும் இந்த ரயில் தண்டவாளத்தை கடந்த போது ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. 
 
இனி அடுத்தடுத்து அனைத்து பயணிகள் ரயில்களும் இந்த தண்டவாளத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்