இந்தியாவில் ஒமிக்ரான்..? விமான நிலையங்களில் கெடுபிடி!!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:02 IST)
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு. 

 
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் வீரியமிக்க புதிய வைரஸான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 
இதுவரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒமிக்ரான் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுபாடுகள், பரிசோதனைகள் விதிக்கபட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்