உத்தர பிரதேச மாநிலம் அவுரியா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ரமேஷ் சந்திர திவாகர். சமீபத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றில் இவரை சந்தித்த பெண்கள் சிலர் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை தள்ளிபடி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்
அதற்கு ரமேஷ் திவாகர் “குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள்?” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.