உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு: நாளை மாலை வரை கெடு!

புதன், 29 ஜூன் 2022 (09:29 IST)
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி  உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் திடீரென ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே
 
இந்தநிலையில் நாளை மாலை 5 மணிக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி  உத்தரவிட்டுள்ளார் 
 
நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் அசாம் உள்பட ஒருசில மாநிலங்களில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மகாராஷ்டிரா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்