இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாஸ்க் அணியும் பலர் உபயோகித்த பின் அவற்றை பொதுவெளியில் வீசிவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உபயோகித்த மாஸ்க், கையுறை, பிபிஇ கிட் போன்றவற்றை கழுவி மீண்டும் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சட்னா மாவட்டத்தில் உள்ள பர்கேடா கிராமப்பகுதியில் சிலர் உபயோகித்த பின் குப்பைகளில் வீசப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை கழுவி மீண்டும் கடைகளில் விற்பதாக கூறப்படுகிறது.