ஆனால் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் வரிகளை உயர்த்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது என்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து 77.29 ரூபாயாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.