இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பிட்டாபுரம் என்ற சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரது பெயரில் இருவர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் சில பவன் கல்யாண் பெயரில் உள்ளவர்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வாக்காளர்களை குழப்புவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்றும் குற்றம் காட்டப்பட்டுள்ளது
அதுபோல ஜன சேனா கட்சி வேட்பாளர் பாலிஷெட்டி ஸ்ரீநிவாஸ் என்பவர் தாடேபல்லி என்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதே தொகுதியில் அதே பெயரில் மற்றொருவர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாகவும் இது போல் இன்னும் சில தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளரின் பெயரிலேயே வேட்பாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு போட்டியாக வாக்காளர்களை குழப்பும் வகையில் வேண்டும் என்றே தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.