நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்.. பாஜக கூட்டணியில் போட்டி.. வெற்றி கிடைக்குமா?

Siva

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (19:36 IST)
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவை இரண்டும் சேர்ந்து நடைபெற உள்ள நிலையில் இன்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆந்திர சட்ட பேரவை தேர்தலுக்கு நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் ஏராளமான அவரது கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

ஜனசேனா என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளாக பவன் கல்யாண் நடத்திவரும் நிலையில் அந்த கட்சியின் சார்பில் அவர் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் பவன் கல்யாண் ஜன சேனா கட்சி இணைந்துள்ளது என்பதும் மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் பவன் கல்யாண் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார் என்பதும் இன்று இரவு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்