நீட் முறைகேடு விவகாரம்.. 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

Mahendran

வியாழன், 18 ஜூலை 2024 (10:49 IST)
நீட் முறைகேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற முறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருக்கும் நிலையில் இந்த தேர்வில் அப்போது முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுதன.

குறிப்பாக இந்த ஆண்டு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் 3 எய்ம்ஸ் மருத்துவர்களை சிபிஐ அதிகாரிகள்   கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய மொபைல் போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய கும்பலுடன் இந்த மருத்துவர்கள் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் விசாரணைக்கு பின்னர் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.

இந்த நிலையில் நீட் தேர்வு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்