வங்கிகளுக்குச் சென்று பணம் கட்ட, அனுப்ப வேண்டுமானால் வேலைக்கு லீவு போடனும் என்ற காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. நவீன இணைய யுகத்தில் வங்கியில் நம் கணக்கில் பணமும், கையில் ஒரு செல்போனும் இருந்தால் போதும் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.