இதற்கான மீட்பு பணி நடைபெற்று வந்த போதே, மேப்படி மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், நிவாரண முகாமாக செயல்பட்ட பள்ளி, வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சென்ற வீடுகள்:
மேலும், சூரல்மலையில் உள்ள பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 4 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை கிராமத்தில் மட்டும் 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மீட்கும் பணி தீவிரம்:
நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.