தி கிரேட்.... ‘’TATA '' அறக்கட்டளை ரூ. 500 கோடி நிதி உதவி...

சனி, 28 மார்ச் 2020 (17:39 IST)
தி கிரேட் ‘’டாட்டா நிறுவனம் ரூ. 500 கோடி நிதி உதவி

உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 649 ஆக எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்களாக இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 70-80 என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்று மாலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரானா வைரஸ் தடுப்புக்காக நாட்டின் பிரபல  தனியார் நிறுவனமான டாடா  சன்ஸ் அறக்கட்டளை நிறுவனம்  ரூ. 500 கோடி நிதி  அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரபல மூத்த தொழிலதிபரும் நாட்டின் மூத்த சமூக ஆர்வலருமான டாட்டாவின்  அறக்கட்டளையின் சேர்மனுமான ‘’ரத்தன் டாட்டா’’ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், தனிநபர் பாதுகாப்பு,  மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றிக்காகவும், குழந்தைகளின் நோய்த் தடுப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும்,  பிரத்யேகமான, அறிவியல் மேலாண்மைக்காகவும், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின்  நலன்களுக்காகவும் ஒதுக்குவதாக TATA  அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதற்கு, நாட்டில் உள்ள மக்கள் மற்றும்  பிரபலங்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM

— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்